மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேனிலாவிற்கு சென்ற தமிழக தம்பதி... நேர்ந்த சோகம்..... போட்டோ ஷூட்டின் போது நடந்த பரிதாபம்.!
சென்னையைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகள் இந்தோனேஷியாவிற்கு தேனிலும் கொண்டாட சென்ற நிலையில் அங்கு நிகழ்ந்த படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் விபூஷ்னியா. இவரும் சேலத்தைச் சார்ந்த மருத்துவரான லோகேஸ்வரன் என்பவரும் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தங்களது தேன் நிலவை கொண்டாடுவதற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலிதீவிற்கு சென்றுள்ளனர். அங்கு முகத்தார் படையில் வைத்து போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தாகி இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தம்பதிகளை மீட்க முயற்சிகள் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களால் லோகேஸ்வரனை சடலமாக தான் மீட்க முடிந்தது. மேலும் இந்த விபத்தில் இருந்த விபூஷ்னியாவின் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான கொஞ்ச நாட்களிலேயே புதுமணத் தம்பதி இருவரும் விபத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.