தமிழகத்தில் முதல் முறையாக கொண்டாடப்படும் தமிழ்நாடு நாள் விழா! தமிழக அரசிற்கு நன்றி கூறும் பொதுமக்கள்!
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக இன்று கொண்டாடப்பட உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைமை செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டு உள்ளது. மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினம் தான் நவம்பர் 1-ஆம் தேதி. இன்றைய தினத்தை தமிழ்நாடு தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் வகையில், அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
தமிழகத்தில் முதல் முறையாக கொண்டாடப்படும் இத்தகைய விழாவுக்காக தனி நிதியையும் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு நாள் அறிவித்த தமிழக அரசுக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.