திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேறு மாநிலத்தவர்களை தமிழ் நாட்டில் அரசியல் செய்ய விடமாட்டோம் என்று கூறுபவர்கள் மத்தியில், மும்பையில் கலக்கும் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வன்.!
மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் 2-வது முறையாக வெற்றிபெற்று பாரதிய ஜனதா கட்சியின் எம். எல். ஏ-வாக இருக்கும் கேப்டன் தமிழ் செல்வன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் பிறந்த வீரத் தமிழர் தான் தமிழ் செல்வன். 11-ம் வகுப்பு வரை படித்துள்ள, தமிழ்ச்செல்வன் மும்பை ரயில் நிலையங்களில் கூலியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பிழைப்பு தேடி மும்பை மாநகரம் வந்தவரை பாரதிய ஜனதா கட்சி வரவேற்று அரசியல் உலகில் அற்புதமான இடத்தில் வைத்து இருக்கிறது. ஆரம்பம் முதல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மக்கள் சேவை புரிந்தார். 2014 வரை தமிழர்கள் அதிகம் வாழும் சியோன் கோலிவாடாவின் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார். 2008ல் அவர் நகரசபை உறுப்பினராக இருந்த போது மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது தன் உயிரை பணயம் வைத்து ஏறக்குறைய ஐம்பது நகரசபை ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றி பாராட்டுக்கள் பெற்றார்.
இவரின் உதவி செய்யும் குணத்துக்காக மும்பை தமிழர்கள் இவரை கேப்டன் தமிழ்ச்செல்வன் என அழைத்தார்கள்.முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸூக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2014 சட்ட சபை தேர்தலில் சியோன் கோலிவாடாவின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இவரை தேவேந்திர பட்னவிஸ் தேர்ந்தெடுத்தார். இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் எம் எல் ஏ ஜெகநாத் செட்டி மிகவும் பிரபலமான நபர் ஆவார். ஆனாலும் தமிழ் செல்வன் எளிய மக்களுக்கு இடையே தனக்கு உள்ள செல்வாக்கின் காரணமாக ஜெகநாத் செட்டியை தோற்கடித்தார்.
அடுத்து நடந்த 2019 சட்ட சபை தேர்தலிலும் பாஜக அவரையே எம் எல் ஏ ஆக்கியது. கேப்டன் தமிழ் செல்வனின் அயராத மக்கள் பணிக்கு வெகுமதியாகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் ஆற்றிய விலை மதிப்பு இல்லாத தொண்டுக்காகவும் பாரதிய ஜனதா கட்சி அவருக்கு மகாராட்டிர மாநில துணை தலைவர் பதவி வழங்கி கவுரவித்து இருக்கிறது.
வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய விட மாட்டோம் என்று துள்ளி குதிப்பவர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கேப்டன் தமிழ் செல்வன் மக்கள் சேவைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.