மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நெல் காப்பீடு திட்டத்திற்கு இன்றே கடைசி நாள்..! தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல்சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதுவரையிலும் சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல்பயிரில், 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியை கடைசிநாளாக அறிவித்திருந்தது. மேலும் விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. அத்துடன் https://pmfby.gov.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் கார்னர் என்ற பக்கத்தில் நேரடியாக பயிர்காப்பீடு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றே கடைசி நாள் என்பதால் விவசாயிகள் பயன்பெற உடனடியாக இதனை செய்து முடிப்பது நல்லது.