தொடங்கியது வேலை நிறுத்த போராட்டம்.. பேருந்துகள் இயங்காமல் மக்கள் அவதி.!!



Tamilnadu government bus strike started

 

ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக ஆறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து துறை தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சார்பாக போக்குவரத்து சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் நல்ல முடிவெடுக்கப்படாததால் இன்று அறிவிக்கப்பட்டபடி வேலை நிறுத்தமானது தொடங்கி இருக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 3,800-க்கும் அதிகமான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு இருக்கின்றன. நள்ளிரவு முதல் தங்களது பணியை முடித்துவிட்டு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Latest news

இதனால் பல முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படும் நிலையில், தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக தேர்வு செய்யப்படும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசு விரைந்து விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.