மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த செயல்பாடுகளுக்கு 50 % நபர்களுடன் அனுமதி - தமிழ்நாடு அரசு உத்தரவு.. என்னென்னெ விதிமுறைகள்?.!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 1, 2021 முதல் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தியுள்ளது. இந்த உத்தரவின் மூலமாக, சில கட்டுப்பாடுகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டு நெறிமுறையுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்படுகிறது.
வழிபாட்டு தளங்களில் நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல் பின்பற்றப்பட வேண்டும். உணவகம், அடுமனை, தங்கும் விடுதிகளில் 50 % வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 % வடிக்கையாளருடன் செயல்படலாம். திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
துக்க நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சி நடந்த, துக்கம் அனுசரிக்க அனுமதி வழங்கப்படும். துணிக்கடை மற்றும் நகைக்கடையில் 50 % வாடிக்கையாளருடன் ஒரே நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
திரையரங்கம், கேளிக்கை விடுதி, உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு மையங்களில் 50 % வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படும். பேருந்துகளில் பயணம் செய்வோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.