போதையில் ரூ.30 இலட்சம் பொருட்களுடன் லாரியில் உறங்கிய ஓட்டுநர்.. தென்னை மட்டையால் விளாசிய ஓனர்.!



Tamilnadu Lorry Driver Attacked by Lorry Owner Driver Liquor Sleeps With Load Delivery Time Ended

ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் லாரியை இயக்கிச் சென்ற குடிகார ஓட்டுனர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓட்டுனரால் பிடிக்கப்பட்டு அடிக்கப்பட்ட அடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

சரக்கு லாரி ஒன்று உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தனது பொருட்களை கொண்டு சேர்க்காததால், விஷயம் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட லாரி உரிமையாளர் தனது லாரியை தேடி பயணித்துள்ளார். அந்த லாரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், லாரியின் அருகே போதையில் லாரி ஓட்டுனர் படுத்துக் கிடந்துள்ளார். 

இதனையடுத்து, ஓட்டுனரை எழுப்பிய உரிமையாளர் விசாரிக்கையில், குடும்ப பிரச்சினை காரணமாக தான் மது அருந்தியதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். லாரியின் உரிமையாளரோ, 30 ரூபாய் லட்சம் மதிப்புள்ள லாரியை சாராய கடைக்கு ஓரங்கட்டியது ஏன்?. வேலையே முடித்துவிட்டு குடிக்கலாம். எதற்காக பயணத்தின் போதே போதை? என்று அடுக்கடுக்காக கேள்வியை எழுப்பினார். 

போதையில் இருந்த ஓட்டுனர் தனது தவறை உணர வேண்டும் என்பதற்காக, தென்னை மரத்தின் காய்ந்த மட்டைகளை எடுத்து அவர் மீது அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நீ கேட்டு காசு கொடுக்கவில்லையா? உனக்கு எப்போது காசு வேண்டுமோ அதை நான் கொடுக்கிறேன் அல்லவா. உனது தேவையை நான் பூர்த்தி செய்கிறேன். எப்போதாவது உன்னிடம் கோபமாக பேசியிருக்கிறேனா?. 

Lorry

வேலையில் எதற்காக இப்படி செயல்படுகிறாய். உன்னை நம்பி அனைத்தையும் முதலீடு செத்துள்ளேன். இரவு என்றாலும் சரி, பகலிலும் மதுபானம் அருந்தி உறங்கினால் எப்படி?. எனக்கு வருமானம் வந்தால் தானே உனக்கு சம்பளம். லாரி ஏதேனும் விபத்தில் சிக்கினால், அல்லது உன்னை அடித்து யாரேனும் லாரியை கடத்தி சென்றால் என்ன செய்வது? என்று பேசியபடியே அடிக்கிறார். 

அடியால் வலி பொறுக்க இயலாத ஓட்டுநர், இனி குடிக்கவே மாட்டேன் என்று கதற ஆரம்பித்துள்ளார். மேலும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் ஒரு முறை திருச்சிக்கு சரக்கு எடுக்க சென்ற சமயத்தில், இதனை போல மதுபானம் அருந்திவிட்டு லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த விடியோவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கம் இணையத்தில் பதிவிடவே, லாரி உரிமையாளருக்கு ஓட்டுனர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.