#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீனாவில் இருந்து ஊர் திரும்பிய தமிழர் திடீர் உயிரிழப்பு!அடுத்தடுத்ததாக வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்! பீதியில் பொதுமக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார். ஹோட்டல் அதிபரான இவர் கடந்த 4ஆம் தேதி சீனாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் . இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். மேலும் நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுதான் அவர் இறந்ததாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் சீனாவில் இருந்து திரும்பிய சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பிறகுதான், அவர் சீனாவில் இருந்து வந்ததே அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் சீனாவில் இருந்து திரும்பி கண்காணித்து வருவதாகக் கூறபடும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை.
சீனாவில் தோன்றிய வைரஸ் நாளுக்குநாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 71000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் இருந்த பல நாட்டினரும் அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் 14 நாட்கள் பரி சோதனைக்குட்படுத்தப் படுகின்றன.
இந்நிலையில் சக்திகுமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவர் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.