மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி செய்த தமிழக அமைச்சா்!! அமைச்சரை பாராட்டிய பொதுமக்கள்!!
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி செய்து அவரது பாதுகாப்பு வாகனத்திலே, விபத்தில் சிக்கிய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ, மற்றும் தமிழக சுகாதாரத்துறை துறை அமைச்சரும் ஆவார். சமீபத்தில் ஏற்பட்ட கஜபுயலில் தீவிர மீட்புப்பணியில் களமிறங்கி செயல்பட்டார். அப்போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மின்சாரவாரிய ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார், அதனை பாா்த்ததும் அமைச்சா் விஜயபாஸ்கா் தனது வாகனத்தில் இருந்து இறங்கி அந்த நபருக்கு முதலுதவி வழங்கினாா்.
அதேபோல் கோவையில் நடந்த விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தானாக முன்வந்து முதலுதவி செய்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அமைச்சரின் செய்கையை பாா்த்த அப்பகுதி மக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.