மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமைச்சரின் மகள் காதலருடன் 2 ஆவது முறையாக தப்பி ஓட்டம்.. கர்நாடகாவில் தஞ்சம்.. பரபரப்பு பேட்டி..!
காதலருடன் பெங்களூர் சென்று தஞ்சமடைந்துள்ள அமைச்சரின் மகள், தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி. அமைச்சரின் வீட்டில் வேலைக்கு சென்றவர் சதீஷ் குமார். ஜெயகல்யாணிக்கும் - சதீஷ் குமாருக்கும் இடையே கடந்த பல வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதில், ஜெயகல்யாணி மருத்துவம் பயின்றுள்ளார். சதீஷ் டிப்ளமோ பட்டதாரி. தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக காதல் ஜோடி வீட்டினை விட்டு வெளியேறி சென்ற நிலையில், காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்யப்படாமல் மும்பையில் இருந்த ஜெயகல்யாணி மீட்டு வரப்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து சதீஷ் குமார் ஏற்கனவே வீடியோ பதிவு செய்து இருந்தார். மேலும், அமைச்சரால் எனது உயிருக்கும், காதலியின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
என் மீது பொய்யான புகார் அளிக்கிறார்கள், எனது குடும்பத்தை மிரட்டுகிறார்கள் என சதீஷ் குமார் கதறி இருந்தார். இந்நிலையில், இந்த காதல் ஜோடி மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவருகிறது. கடந்த 5 ஆம் தேதி (அதாவது நேற்று முன்தினம்) வீட்டில் இருந்து வெளியேறி, காரில் செல்லும் போது காதல் ஜோடி வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், "நாங்கள் இருவரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம். எங்களை காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஜெயகல்யாணி மற்றும் சதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தமிழகத்தில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது தந்தை அமைச்சர் என்பதால் எங்களை அல்லது காதலனை கொலை செய்திடுவார்கள் என அச்சம் உள்ளது. அதனால் கர்நாடக மாநிலத்தின் உதவியை நாடி வந்துள்ளோம். பெங்களூர் மாநகர ஆணையரிடம் நாங்கள் பாதுகாப்பு வழங்க கூறி புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அறநிலையத்துறை அமைச்சரின் மகளுக்கே அமைச்சரிடமிருந்து பாதுகாப்பு தேவைப் படும் நிலையில் கோவில்களை எப்படி பாதுகாப்பார் pic.twitter.com/cu3JUiRzJm
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) March 4, 2022
ஜாதியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்பது புரட்சியை உங்கள் அமைச்சரிடம் காட்டுங்கள்*
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) September 12, 2021
பெரியார் சிலை வைப்பதற்கு நீங்கள் தகுதி உள்ளவரா தகுதி அற்றவர் என்பது இதன்மூலம் நிரூபனம் ஆகட்டும்
ரஜினி மகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லையா?
நடிகர் சிவகுமார் மகன் சூர்யா pic.twitter.com/CiMm3INHq4