மக்களே உஷார்! அடுத்த 2 நாட்களுக்கு உள்தமிழகத்தில் கடுமையான வெயில்; சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் தற்போது இம்மாத தொடக்கத்திலேயே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உள்தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 10
தமிழக உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை, தமிழகத்திலேயே அதிகப்பட்சமாக தர்மபுரியில் வெப்பநிலை 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது தர்மபுரியில் கடந்த 20 ஆண்டுகளில், மார்ச் மாதத்தில் உணரப்பட்ட அதிகப்பட்ச வெப்பநிலை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.