மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. குட் நியூஸ் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் நாளை முதல் 6 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதில் சில பகுதிகளில் மட்டும் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
ஆனால், தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை வேலூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வளிமண்டல சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.