மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் ஆம்னி சொகுசு பேருந்து 500 கி.மீ செல்ல ஆகும் செலவு இவ்வுளவா??... உரிமையாளர் சங்கம் போர்க்கொடி.!
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. முந்தைய காலலங்களை போல ஆம்னி பேருந்துகள் இயங்காத காரணத்தால், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் - அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன் தெரிவிக்கையில், "ஆம்னி பேருந்து தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, தொழிலை மேற்படி தொடர முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். சொகுசு பேருந்து ஒன்றுக்கு ரூ.50 இலட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை செலவாகிறது. ரூ.50 இலட்சத்தில் வாங்கப்படும் சொகுசு பேருந்து 500 கி.மீ தூரம் பயணம் செய்ய எரிபொருள் செலவு ரூ.12 ஆயிரத்து 750 ஆகிறது.
இதில், கூடுதலாக சாலை வரி ரூ.2,500, தேய்மான செலவு ரூ.2,100, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஊதியம் ரூ.2,000 என நாளொன்றுக்கு மொத்தமாக ரூ.26 ஆயிரத்து 350 செலவு ஆகிறது. ஒரு பேருந்தை இயக்குபவர் பராமரிப்பு, எப்.சி போன்ற பல காரணத்தால் வருடத்தில் பல நாட்கள் பேருந்தை இயக்குவது இல்லை. கொரோனாவின் போது 500 நாட்களுக்கு மேல் ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. பேருந்துகள் வட்டி மட்டும் ரூ.5 இலட்சம் ஆகும்.
நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவே குறைந்தது ரூ.3 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை செலவாகிறது. தமிழ்நாட்டில் உள்ள 600 ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மூலமாக, மாநில அரசின் அனுமதி பெற்ற பேருந்துகளின் எண்ணிக்கை 1,600 ஆகும். வெளிமாநிலத்திற்கு செல்ல 2,400 பேருந்துகளுக்கு அனுமதி உள்ளது. இவ்வாறாக மொத்தமாக 4,000 பேருந்துகள் அனுமதியோடு இயக்கப்படுகிறது.
தினசரி அதிகரித்து வரும் டீசல் விலை உட்பட பல காரணத்தால், 2,800 பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. கடன் செலுத்தவும் வழிவகை இல்லாததால் ஜப்திக்கு பயந்து பாதி பேருந்துகள் நிறுத்தப்பட்டு, மொத்தமாக தற்போது 1,200 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தொழிலை தொடர இயலாமல், கடன் தொல்லைக்கு ஆளாகிய 10 ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 3 மாதத்தில் தற்கொலை செய்துள்ளார்கள்.
ஆம்னி பேருந்துகளுக்கு இயக்காமல் நிறுத்தி வைத்தல் என்ற சாலை விதியின் கீழ், மாநில அரசின் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதற்கு கடந்த ஏப்ரல் மாதம் மாநில அரசு தடை விதித்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாநில அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியது.
கடந்த 2021 அக். 20 ஆம் தேதி வரை சாலை விதி வரிவிதிப்பு இரத்து செய்யப்படுகிறது என்றும், அதற்கான வரியை செலுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த பதில் வழங்கியும் 368 பேருந்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அரசுக்கு ரூ.8 கோடி வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.