திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#சற்றுமுன்: வெளிமாநிலத்தவரின் ஆதார் விபரம் சேகரிக்க தமிழ்நாடு காவல்துறை அதிரடி உத்தரவு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலத்தவர் கூட்டமாக வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.
வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக வருவோருக்கு, தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. ஆனால், அவர்கள் குறித்த தரவுகள் முறையாக சேகரித்து வைக்கப்படுவது இல்லை. அதேபோல, முறைகேடாக ஆதார் போன்ற தகவலையும் பதிவு செய்து அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் முந்தைய காலங்களில் குற்றச்செயல்களும் அதிகளவில் நடந்து வந்தது. காவல் துறையினரின் தீவிர களப்பணிக்கு பின்னால் அவை குறைந்தது. குற்றங்கள் நடந்தாலும் அதிகாரிகள் குற்றவாளியை எளிதில் கைது செய்து வந்தனர். தற்போதைய நிலைமை மேலும் அதிகரித்துள்ள காரணத்தால், தமிழ்நாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றிவிட்டு செல்லும் தொழிலாளர்களின் ஆதார் தகவலை சேகரிக்க தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் எங்கிருந்து வேலைக்கு வந்துள்ளனர்? எந்த நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்? ஆதார் தொடர்பான தகவல்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.