மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு ஆசிரியர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் லாப நோக்கத்திற்காக தங்களிடம் படிக்கும் மாணவர்களை கொண்டு டியூஷன் வகுப்பு எடுத்து வருகின்றனர். அவர்களை கண்காணித்து அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் மேலும், தமிழக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாணவர்களுக்கு வசதியாக கட்டணமில்லா தொலைபேசி சேவையை இன்னும் 8 வாரத்திற்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.