35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
#JUSTIN: வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா?.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பறவையின் காரணமாக இருமல் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் கொண்டிருந்த இளைஞர் மரணமடைந்தார்.
இதனால் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுவாக நடக்கும் இறுதி தேர்வுகளை விரைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்தின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாத பதற்றம் வேண்டாம். தேர்வுகளை முடித்த பின் கோடைகால விடுமுறை அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.