பெட்ரோல் குண்டு வீசுவோருக்கு உச்சகட்ட எச்சரிக்கை; தேசிய பாதுகாப்பு சட்டம் பாயம் - தென்மண்டல ஐ.ஜி!



Tamilnadu South Zonal IG Warning Anti Socials Activity man

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆதரவு நபர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான பலரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கைதானவர்களுக்கான ஆதரவு மக்கள், எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்தனர். சில இடங்களில் பாப்புலர் பிராண்ட் அமைப்புக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து, எதிர்ப்பை தீவிரமாக வெளிப்படுத்தினர். 

tamilnadu

இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தென்மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 20000 காவலர்கள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயும். விளம்பரத்திற்காக யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் நிறுத்திக்கொள்ளவும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.