மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூடல்? நேரக்குறைப்பு?..
தமிழ்நாட்டில் ஜன. 6 ஆம் தேதியான நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாளில் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுபான கடைகள் மற்றும் பப்புகள் போன்றவற்றுக்கான நேரக்குறைப்பு தொடர்பான பிற விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூடப்படாது.
மதுபானக்கடைகளுக்கான நேரக்குறைப்பு, டோக்கன் சிஸ்டம் போன்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஊரடங்கு அமலாகும் நாளில் மதுபான கடைகள் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.