#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை; சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி.!
தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒருசில விஷயங்களில் வீணாக நேரத்தை செலவிடுவதோடு பல நேரங்களில் மிகப்பெரிய ஆபத்துகளிலும் சிக்கி கொள்கின்றனர். என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனுடன் சேர்த்து ஆபத்துகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
செலஃபீ என்ற பெயரில் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பது, ஓடும் ரயில் முன்பு செலஃபீ எடுப்பது என எத்தனையோ உயிர்கள் பறிபோயுள்ளது. தற்போது டிக் டாக் என்னும் செயலி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி மியூசிக்கலி டிக் டாக் செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இச்செயலிக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் இவ்வாறான செயலி மூலம் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்ற கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே மத்திய அரசின் உதவியுடன் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்தது போலவே டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.