உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் தமிழக முதல்வர்!



tamlnadu cm give 1 crore SI wilson family


கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் வில்சனை சுட்டு மற்றும் கத்தியால் குத்திக் படுகொலை செய்தனர்.

அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கூறுகையில், அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்த தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

si

இதனையடுத்து உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.