தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மின்கம்பம், மின்சாதனங்களை இடம் மாற்ற மதிப்பீட்டு கட்டணம் அதிரடி குறைப்பு.! தமிழக மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.!
தமிழக மின்சார வாரியம் மின்விநியோகம் செய்வதற்காக கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின்மாற்றி, மின் விநியோக பெட்டி போன்ற பல சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.
மக்கள் தங்கள் வீடு மற்றும் நிலத்தின் அருகே உள்ள மின் சாதனங்களை அகற்றுவதற்கு மின்வாரியத்தை அணுகி, பகிா்மான கழகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய காலங்களில் அந்த மின்சாதனங்களை அகற்றுவதற்கான மொத்த செலவும் கணக்கிடப்பட்டு, அது விண்ணப்பதாரரிடம் இருந்து பெறப்படும்.
பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் நிலத்தின் அருகே உள்ள மின்கம்பி, மின் வழித்தடம் டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றை இடம் மாற்றம் செய்வதற்கு ஆக கூடிய மொத்த மதிப்பீட்டுத் தொகையில், 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் (Establishment and Supervision charges) என்று செலுத்த வேண்டி இருந்தது. தமிழக மின்சார வாரியம் இது குறித்து அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
ஆனால் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படியும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் ஆலோசனைப்படியும் 22 சதவீதம் இருந்த நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் தற்போது ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆணையை மின்சார வாரியம் பிறப்பித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை பெருமளவு குறையும் என்பதால், அவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.