மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. டாஸ்மாக் விற்பனையாளர் கைது!
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் காட்டு ராஜா என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிகள் தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, மாணவிகளை பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் காட்டு ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.