மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி, மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.