குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஆத்தாடி... தீபாவளிக்கு மதுவிற்பனை வசூல் எவ்வளவு பார்த்தீர்களா.!! மதுரை மாவட்டம் தான் கெத்து.!
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தநிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுப்பான பார்கள் பல மாதங்களுக்கு பின்னர் சில தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் தீபாவளியையொட்டி 2 நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலம் - ரூ51.68 கோடி, திருச்சி மண்டலம் - ரூ47.57, சேலம் மண்டலம் - ரூ46.62 சென்னை மண்டலம் - ரூ 79.84, கோவை மண்டலம் 74.46 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.