தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தீபாவளி பண்டிகை விற்பனையை மிஞ்சி விற்பனையில் சாதனை படைத்த டாஸ்மாக்!.. கோடிகளை கொட்டிய மதுபான பிரியர்கள்..!
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. மேலும், சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. இதன் காரணமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதியே டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்த மதுப்பிரியர்கள், மதுபான பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இந்த நிலையில், ஆகஸ்டு 14 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ. 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மண்டல அளவிலான விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு மட்டும் ரூ.58.26 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலம் ரூ.52.29 கோடி விற்பனையுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும் மற்ற மண்டலங்களான சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 மற்றும் திருச்சி ரூ.53.48 அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று நடந்த விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு தடை காலம் முடிவடைந்த நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று ரூ.225.42 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. இது கடந்த 14 ஆம் தேதி விற்பனையை விட ரூ.48.50 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.