53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இவரெல்லாம் ஒரு ஆசிரியரா.! 13 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! விழுப்புரத்தில் அதிர்ச்சி!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாக்கூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் பள்ளியில் மாணவிகள் அனைவருக்கும் நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்துள்ளனர். அப்பொழுது 3 ஆம் வகுப்பில் பயிலும் 8 மாணவிகள் மற்றும் 4 ஆம் வகுப்பில் பயிலும் 5 மாணவிகள் ஆசிரியர் கருணாகரன் என்பவர் தங்களிடம் தொடர்ந்து தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்கள்.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நான்கு மாதங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பின்னர் ஆசிரியர் கருணாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.