திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
9ம் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் போக்சோவில் கைது.!
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் கோவையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஆனந்த் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்த் குமார் கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மனைவியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.