திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவருக்கு டாட்டா காட்டி முன்னாள் காதலருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்... புதுச்சத்திரம் அருகே பரபரப்பு..!
புதுச்சத்திரம் அருகே குடும்ப தகராறில் கணவனை பிரிந்து முன்னாள் காதலருடன் சென்ற பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே புதுசத்திரம் காவல்நிலைய சரகம் தீர்த்தனகிரி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி (27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கடந்த 15 ஆம் தேதி (நேற்று முன்தினம்) கலைவாணி நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் பாரதிதாசன் தனது மாமியாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைவாணி அங்கு வரவில்லை என்று கூறிதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிதாசன் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கலைவாணி தனது கணவரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் என்னை தேடவேண்டாம், நான் முன்னாள் காதலன் விகாஷ் என்பவருடன் சென்றுள்ளேன் என ஆடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
இதனை கேட்டு பதறிப்போன பாரதிதாசன் இதுபற்றி புதுச்சத்திரம் காவல்நிலையத்தி புகார் செய்தார். புகார் மனுவில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளார். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.