திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்: பட்டப்பகலில் துணிகரம்..!
தூத்துக்குடி அருகேயுள்ள சுந்தரவேல்புரதம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் முருகன் என்ற கட்டை முருகன் (27). இவர் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவரும், அழகேசபுரம் பகுதியை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் அந்த பெண்ணை தருவைகுளம் அகுகேயுள்ள கல்மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அங்கு அந்த பெண்ணை கட்டை முருகன் பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதன் பின்னர் அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட கோகுல்ராம், தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அந்த பெண் இதற்கு மறுத்து விட்டதால், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், கட்டை முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் இடம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.