வெறும் இரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் நிற பற்களை போக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!
தனது அழகில் ஆண், பெண் என இருபாலருக்கும் அதிக அக்கறை உனது. மற்றவர்கள் முன்பு தாம் அழகாக தெரியவேண்டும் என நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
என்னதான் சீவி, சிங்காரித்து அழகாக தோன்றினாலும் கூட, நமது அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது நமது பற்களில் தெரியும் மஞ்சள் கரை. இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி பலரிடம் உள்ளது.
புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களால் நமது பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சரி அவ்வாறு மஞ்சள் நிறமாக மாறிய பற்களை ரசாயனம் எதுவும் இல்லாமல் வேலை நிறமாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இது நமது முகம், தலை முடி மட்டும் இன்றி நமது உடல் முழுவதும் ஆரோக்கியம் தரும் பல விஷயங்களை நமக்கு தருகின்றன.
எப்படி தேங்காய் என்னை மூலம் வெள்ளை பற்களை பெறுவது? தேங்காய் எண்ணையுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன் படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை உங்கள் குளியலறையில் அல்லது குளிரூட்டியில் வைத்திருக்க முடியும்.
தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் பற்கள், முரசுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும் போதும் தேங்காய் எண்ணெய்யை தடவினால் இலகுவான தீர்வைப் பெற முடியும்.