திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஏன் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்தாய்?" - மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாளா மாவட்டம், கிஷ்டம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா. இவரின் கணவர் சாட்பெல்லி.
சம்பவத்தன்று சாட்பெல்லி கோழிக்கறியை எடுத்து வந்து மனைவியிடம் சமைக்க கொடுத்து இருக்கிறார்.
ஆனால், சங்கரம்மாவோ கத்தரிக்காய் குழம்பு வைத்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாட்பெல்லி, மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, சாட்பெல்லி ஆத்திரத்தில் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சங்கரம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
சாட்பெல்லியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.