35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
ரூ.1000 பணத்திற்கு பதிவு செய்வதாக அழைத்து சென்று மூதாட்டியின் கம்மல் திருட்டு; நூதனமாக மோசடி செயல்., மக்களே உஷார்.!
தென்காசி நகரில் உள்ள மாதாகோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் கல்யாணி (வயது 81). மொத்தட்டி வீட்டருகே இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியின் குடும்ப நிலையை பேச்சுக்கொடுத்தவாறு விசாரித்துள்ளார்.
மூதாட்டி வறுமையால் தவிப்பதாகவும், தனக்கு யாரும் இல்லை என்றும் கூறவே, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ரூ.1000 திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் இணைய விண்ணப்பிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
தான் திட்டம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என கூறவே, மூதாட்டியும் அவருடன் சென்றுள்ளார். ஸ்டுடியோ அருகில் வைத்து அரசின் ரூ.1000 பெறுவதற்கு கம்மல் இல்லாமல் ஏழையாக போட்டோ எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மூதாட்டியும் மர்ம நபரின் மீது இருந்த நம்பிக்கையில் கம்மலை கழற்றி தனது கைப்பைக்குள் போட்டு கொடுத்துள்ளார். மர்ம நபர் அதனை இலாவகமாக திருடிவிட்டு, ரூ.1000 பணத்திற்கான படிவம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.
கம்மலை திருடியது மூதாட்டிக்கு தெரியவராத நிலையில், நீண்ட நேரம் ஆகியும் இளைஞர் வராததால் பதற்றமாகி கம்மலை சோதித்தபோது விஷயம் புரியவந்துள்ளது.
சாலையோரம் கண்கலங்கி நின்ற மூதாட்டியிடம் பொதுமக்கள் விசாரித்தபோது மர்ம நபரின் நூதன திருட்டு செயல் அம்பலமானது. இதனையடுத்து, சம்பவம் குறித்து தென்காசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரேஷன் கடைகள் வாயிலாகவே ரூ.1000 பணத்திற்கான தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற தகவலை எடுத்துரைவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.