மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யு.கே.ஜி படிக்க சென்ற 6 வயது சிறுமி, வேன் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழப்பு.. ஓட்டுனரின் அலட்சியத்தால் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
வேன் ஓட்டுநர் அலட்சியத்தால் சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் மக்களை பதற வைத்துள்ளது. வீட்டருகே இறங்கவேண்டிய சிறுமியை முந்தைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டு ஓட்டுனரின் செயலால் நிகழ்ந்த மரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தெற்கு கரும்பனூர் கிராமம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ், மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். இவரின் மனைவி லிங்கேசுவரி. இவர்களுக்கு விவேகா (வயது 8), சபீனா (வயது 6) என 2 மகள்கள் உள்ளார்கள்.
விவேகா தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வருகிறார். சபீனா ஆலங்குளத்தில் இருக்கும் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறார். நேற்று அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை பள்ளியின் வேனில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். அப்போது, வேன் ஓட்டுநர் சபீனாவின் அவரின் வீட்டில் இறக்கிவிடவில்லை.
மாறாக, முந்தைய நிறுத்தத்தில் இறங்கிய சிறுமியோடு சேர்த்து இறக்கிவிட்டுள்ளனர். வேன் புறப்பட்டபோது அதன் அருகில் நின்ற சிறுமி நிலைதடுமாறி சக்கரத்தில் விழுந்து, அங்கேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறியழுதனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனின் ஓட்டுநராக ஸ்ரீராம் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.