#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உயிருக்கு உயிராக காதல்., காதலன் கைவிட நினைத்தால் பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி.!
ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுநரால் ஏமாற்றப்பட்டதாக கூறி, பெண்மணி தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், ஐந்தான்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இதே கிராமத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ். இவர்கள் இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் ஊராருக்கு தெரியவரவே, சதீஷ் தனது காதலி செல்வமணியை விட்டு பிரிந்து செல்ல முயன்றதாக தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வமணி, தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த ஆதாரத்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு நியாயம் கேட்டு நேரடியாக சதீஷின் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரின் உறவினர்கள் செல்வமணியை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
சதீஷின் வீட்டு முன்பு தர்ணா போராட்டமும் நடைபெற்ற நிலையில், ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று எண்ணி வருந்திய பெண்மணி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான பின்னர் காவல்துறையினர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வரும் நிலையில், தற்கொலைக்கு முயற்சித்துள்ள பெண்மணி செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.