53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், சுரண்டை கிராமம், எம்.ஜி.ஆர் நகரில் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ்குமார் (வயது 27). இவரின் தந்தை இயற்கை எய்திவிட்டார். தந்தையின் மீது பாசம் கொண்ட ஹரிஷ் குமார், தந்தையின் இழப்பால் வருத்தத்திலேயே இருந்து வந்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி இருக்கின்றனர். இதனிடையே, சம்பவத்தன்று உச்சகட்ட மனவேதனையில் தனிமையான சூழலில் இருந்த ஹரிஷ் குமார், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!
காவல்துறையினர் விசாரணை
வீட்டுக்குள் சடலமாக ஹரிஷ் தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலில் விழுந்த தோழி.. மனஉளைச்சலில் சக மாணவி எடுத்த விபரீத முடிவு.. குமரி அருகே பரிதாபம்.!