மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு.. குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மற்றும் அதனை சுற்றிலும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உட்பட பல அருவிகள் இருக்கின்றன.
சுற்றுலாப்பயணிகள் வார இறுதி மற்றும் சுயவிடுப்பு எடுத்து விடுமுறை நாட்களில் அங்கு குவிவது வழக்கம். ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பொதிகைமலையில் மழை பெய்து வருகிறது.
குற்றாலம் மழை pic.twitter.com/TsQlIlkyhU
— AM.GANESAMOORTHY (@AGANESAMOORTHI) November 5, 2023
இதனால் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான அருவிகளில் வெள்ளநீர் ஆட்பறித்து கொட்டுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியர் தாற்காலிக்காக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நிகழ்விடங்களில் சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் 05-11-2023 5.45 Pm#Tenkasi #Tenkasirain #Shencottah pic.twitter.com/3LHVf5PMRH
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 5, 2023