தென்காசி: அமரனா? வேட்டையனா? அரசு மருத்துவமனை வளாகத்தில் அனுமதியின்றி கலாய் ரீல்ஸ்.. இளைஞர்கள் இருவர் கைது.!



Tenkasi Govt Hospital Prank Video Shoot 

 

மருத்துவமனை வாசலில் இளைஞர்கள் பிராங்க் வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரண்டு இளைஞர்கள் சென்றனர். இவர்கள் அங்கிருந்த நபரிடம், தன்னுடன் வந்த இளைஞருக்கு கை உடைந்துவிட்டது.

இதையும் படிங்க: கொலைக்கு வித்திட்ட மதுவிருந்து; மணமகன் பார்ட்டி மர்டரில் முடிவு.. தென்காசியில் பயங்கரம்.!

இதனால் எக்ஸ்ரே (படம்பிடிக்கும் மையத்திற்கு செல்ல வேண்டும் என கேட்கிறார்கள்) மையத்திற்கு செல்ல வழி கேட்கிறார்கள். ஒருவரோ இருவரையும் பார்த்து நேராக சென்று திரும்புங்கள் அங்கு மையம் உள்ளது என்று கூறுகிறார். 

உடனடியாக இளைஞரோ அங்கு வேட்டையன் படம் ஓடுகிறதா? அமரன் படம் ஓடுகிறதா? என கேள்வி எழுப்புகிறார். இதனால் ஆத்திரமடைந்த நபரோ, உங்** என அவர்களை தென்காசி மண்ணின் வார்த்தை ஒன்றை பயன்படுத்தி திட்டிச் செல்கிறார். 

மருத்துவமனை வளாகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி எடுக்கப்பட்ட இந்த காணொளியானது தற்போது வெளியாகி விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 

தங்களின் கையில் செல்போன் வந்ததும், அதனை வைத்து ரீல்ஸ் எடுத்து ஒரே நைட்டில் உலக பேமஸ் ஆக நினைக்கும் இளைஞர்கள், சட்ட விதிகளை தெரிந்து படமாக்க முயற்சிக்க வேண்டும் என்பதே விபரம் தெரிந்தவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. 

இந்த விஷயம் தொடர்பான விவகாரத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!