மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருமகள் உடல்நலம்பெற தீக்குளித்து உயிரைவிட்ட மாமியார்.. கனவால் கதைமுடிந்த சோகம்.!
கலியுகத்தில் கர்ணன் என்பதைப்போல, மருமகளை மாற்றாந்தாய் பிள்ளையாக எண்ணி கொடுமை செய்யும் மாமியார்களுக்கு மத்தியில், மருமகளுக்காக உயிரைவிட்ட மாமியாரின் பகீர் செயலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், ஐந்தாம்கட்டளை பகுதியில் வசித்து வருபவர் மணிமுத்து. இவரின் மனைவி அன்னம். தம்பதிகளுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர். மணிமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார்.
அன்னத்தின் மகன் கண்ணன். இவரது மனைவி கவிதா. திருமணமான புதிதில் இருந்து மருமகள் கவிதா மீது மாமியார் அன்னம் பாசத்துடன் இருந்து வந்துள்ளார். கவிதாவும் அதனைப்போல தனது மாமியாரை கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கவிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை மாமியார் அன்னம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்த்து வந்துள்ளார். ஆனால், நோய்ப்பதிப்பு குறையவில்லை.
இந்நிலையில், அன்னத்தின் கனவில் நீ இறந்தால் உன் மருமகள் நன்றாக இருப்பாள் என்று யாரோ கூறியதாக தெரியவருகிறது. இதனால் அன்னமும் தனது மருமகள் கவிதாவிடம் நான் இறந்தால் நீ நன்றாக இருப்பாய் என்று கூறி வந்துள்ளார்.
நிலைமை இப்படியிருக்க, திடீரென அன்னம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மாமியார் தற்கொலையை அறிந்த மருமகள், ஊராரிடம் நடந்ததை கூறி புலம்பும்போது உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, தகவல் அறிந்த கடையம் காவல் துறையினர் அன்னத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.