மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சொந்த ஊரில் திருட்டு.. 4 பேர் கும்பல் கைது.. பரபரப்பு தகவல்.!
உள்ளூரை சேர்ந்தவர் வெளியூர் சென்ற நேரத்தில் நடந்த கொள்ளை விவகாரத்தில், பகீர் திருப்பமாக அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், கீழாம்பூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியா பிள்ளை. இவரின் மகன் செல்லப்பா. இவர் தனது குடும்பத்தாருடன் கடந்த பிப். 18 ஆம் தேதி வெளியிருக்கு சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தங்கம், வெள்ளி நகை மற்றும் பணம் திருடுபோனது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில், இதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 44), சங்கர் (வயது 37), முரசொலி செல்வம் (வயது 36). தங்கமணி (வயது 42) ஆகியோர் திருட்டு செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் ரூ.10 இலட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகள், 110 கிராம் வெள்ளி நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்யும் போது, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.