மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பேருந்து - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. இளம்பெண் உட்பட 2 பேர் பலி; அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியீடு.!
அச்சம்பட்டி பகுதியில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான விவகாரத்தில் பதைபதைப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், மங்கலாபுரம் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரின் மனைவி அகிலா (வயது 19). இவர் தீபாவளியையொட்டி தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த ஐயப்பன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அச்சம்பட்டி பகுதியில் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லம் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அகிலா மற்றும் ஐயப்பன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.