மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோழி இறந்த துக்கத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண்; நட்பு இயற்கை பிழையானதால் சோகம்.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம், முருகன்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவரின் மகள் திலகா (வயது 20). நேற்று மாலை நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவலை அறிந்த பாவூர்சத்திரம் காவல் துறையினர், திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திலகா படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், கல்லூரி தோழியான மற்றொரு மாணவி சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் இறந்ததில் இருந்து சோகமாகவே இருந்து வைத்த திலகா, விபரித முடிவை எடுத்து தெரியவந்தது.