மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓரினசேர்க்கை அழைப்பு விடுத்து பணம் பறிக்கும் கும்பல்: இளைஞர்களே உஷார்.. நால்வர் கும்பல் கைது.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றிவருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், புளியங்குடி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அச்சமயம், புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சுற்றுலா வாகனங்கள் நிறுத்தமிடத்தில், ஓட்டுநர்களிடம் கும்பல் தகராறு செய்துள்ளது.
அதிகாரிகள் அங்கு நோட்டமிடுவதை உணர்ந்துகொண்ட கும்பல், காரில் அவசர கதியில் ஏறி தப்பிச்சென்றது. காரை விரட்டிச்சென்ற காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள், சில கி.மீ தூர துறத்தலுக்கு பின் காரை மடக்கினர்.
காரில் இருந்த ஆறு பேர் புளியங்குடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது, அவர்கள் உள்ளார் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் (வயது 19), புளியங்குடியை சேர்ந்த சதீஷ் (வயது 20), கனகராஜ் (வயது 22), சிவகிரியை சேர்ந்த கவிகுமார் (வயது 21) மற்றும் 2 சிறார்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் குழுவாக சேர்ந்து சிவகிரியில் செல்போன் செயலி மூலமாக வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து, பின் ஓரினசேர்கைக்கு அழைத்து பணம்பறித்து விரட்டியடிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டது தெறிந்தது.
இக்கும்பலிடம் சிக்கிய பலரும் மானம் கருதி பணத்தை இழந்தபோதும் புகார் அளிக்காமல் இருந்துவிடவே, இதனை தனக்கு சாதகமாக்கிய கும்பல் தொடர்ச்சியாக குற்றச்செயலை அரங்கேற்றி இருக்கிறது என்பது அம்பலமானது.
இந்த கும்பலை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.