செய்யாத தவறுக்கு மன்னிப்பு கடிதம்.. கல்லூரி ஆசிரியை, ஆசிரியர் தொல்லையால் மாணவி தற்கொலை.. தென்காசி அருகே பரபரப்பு.!



tenkasi-puliyangudi-college-girl-suicide-due-to-profess

கல்லூரிக்கு செல்போனை எடுத்து செல்லாமலேயே மன்னிப்பு கடிதத்தை மாணவியிடம் இருந்து எழுதி வாங்கியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரின் மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடி, டி.என். புதுக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் இளங்கலை முதலாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் மகளை கல்லூரிக்கு அனுப்புவதற்கு, உறக்கத்தில் இருந்தவரை எழுப்ப தாய் மகளின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, மகள் இந்து பிரியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். 

இதனைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்து பிரியாவின் உடலை கட்டிலில் இறக்கி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரியாவின் உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tenkasi

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ல்ல தொடங்கினர். அப்போது, மாணவி இந்து பிரியா எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், "நான் கல்லூரிக்கு செல்போன் கொண்டு சென்றதே இல்லை. ஆனால், கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியரும், பேராசிரியையும் என்னை தொந்தரவு செய்கிறார்கள். 

நான் வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற நிலையில், நான் செல்போன் கொண்டு வந்தேன். அதனை நாங்கள் பிடித்துவிட்டோம். அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என கடிதம் எழுதி வாங்கி வைத்துக்கொண்டார்கள். நான் செய்யாத தவறுக்கு என்னை மிரட்டி கடிதம் பெற்றார்கள். 

இதனால் எனக்கு ஏற்பட்ட மனவேதனையினால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தின் பேரில் அதிகாரிகள் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.