மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்காசியில் பயங்கரம்: பால் வியாபாரியுடன் பழக்கம்; அன்பான கணவன் துள்ளத்துடிக்க கொலை.. சிறைக் கைதிகளாக கள்ளக்காதல் ஜோடி.!
கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால், மனைவியே கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டிக்கொடுத்து அரங்கேற்றிய கொடூரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், போத்தி கோவில் தெருவில் வசித்து வருபவர் பேச்சிமுத்து. இவரின் மகன் மாரியப்பன் (வயது 39). வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் ஹோட்டலில், வடை மாஸ்டராக வேலை பார்க்கிறார். மாரியப்பனின் மனைவி கனகா (வயது 33). தம்பதிகளுக்கு 2 மகள்கள், மகன் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 05:30 மணியளவில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வருகிறேன் என கனகவிடம் கூறிச்சென்ற மாரியப்பன், புளியங்குடி நவாப் சாலையில் மர்ம நபர்களால் கம்பியால் தாக்கப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மாரியப்பன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் அசோக், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். மாரியப்பனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தகாத உறவை கண்டித்ததால் கொலை நடந்தது அம்பலமானது. கொலை செய்தது அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி செல்லப்பாவின் மகன் விக்னேஷ் (வயது 25) என்பது உறுதியானது. அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விக்னேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து பகீர் வாக்குமூலமும் விசாரணையில் பெறப்பட்டது.
மாரியப்பன் கேரளா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரின் குடும்பமும் அங்கேயே இருந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அனைவரும் வாசுதேவநல்லூர் வருகை தந்துள்ளனர். அங்கு மனநோய்க்கு மாரியப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவரின் வீட்டில் கடந்த 3 ஆண்டாக விக்னேஷ் பால் ஊற்றி வந்த நிலையில், கனகாவுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகிய நிலையில், ஒருகட்டத்தில் கள்ளக்காதல் வயப்பட்டு தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் உறவினர்கள் வாயிலாக மாரியப்பனின் காதுகளுக்கு சென்றுள்ளது.
இதனால் அவர் தனது மனைவி மற்றும் விக்னேஷை கண்டித்து இருக்கிறார். விக்னேஷ் முன்பு தன்னிடம் நல்வழியில் பழகியதால், மாரியப்பன் ரூ.6 இலட்சம் கடனும் கொடுத்து இருக்கிறார். கடன் வாங்கிவிட்டு தனது மனைவியையும் அபகரிக்க முயற்சித்தால், விக்னேஷிடம் மாரியப்பன் அவ்வப்போது கடனை திரும்ப கேட்டு வந்துள்ளார்.
இதனால் மாரியப்பனை தீர்த்துக்கட்டுவதே தீர்வு என யோசித்த விக்னேஷ், சம்பவத்தன்று பின்தொடர்ந்து சென்று தனது வெறிச்செயலை அரங்கேற்றி கொலை செய்துள்ளார். இவ்விவகாரத்தில் கனகாவிற்கும் தொடர்பு இருந்ததால், அவரையும் கைது செய்த காவல் துறையினர் இருவரையும் சிவகிரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.
கள்ளகாதலால் ஒன்றிணைந்த ஜோடி, இறுதியில் பிரிக்கப்பட்டு தனித்தனியே வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.