மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த பெண்மணி குளத்தில் குதித்து தற்கொலை.. தென்காசி அருகே சோகம்.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புதியவன் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், நேற்று செங்கோட்டை - வல்லம் சாலையில் இருக்கும் புளிச்சிகுளத்திற்கு வந்த மகாலட்சுமி, தீடீரென குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செங்கோட்டை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மகாலட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் மகாலட்சுமி கடந்த சில நாட்களாகவே மன விரக்தியுடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.