மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரள காவல்துறையிடம் தப்பி, தமிழ்நாடு காவல்துறையிடம் சிக்கிய திருடன்; மொட்டையடிச்சா மாறுவேடமா?..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவராக இருக்கிறார்.
கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், இறுதியாக கேரள காவல்துறையினரும் கொள்ளை வழக்கில் சிக்கி இருக்கிறார்.
காவலர்களின் பிடியில் இருந்து பாலமுருகன் தப்பிவிட்ட நிலையில், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு மாநில காவல் துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், கடையம் இராமநதி அணை பகுதியில் மொட்டையடித்துக்கொண்டு, மாறுவேடத்தில் பதுங்கியிருந்தவரை தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் கேரள காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.