தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சேலையை இழுத்து தமிழக மலைவாழ் பெண்களிடம் அத்துமீற முயற்சி.. கேரள வனத்துறை அதிகாரிகள் பகீர் செயல்.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் தலையணை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வனப்பகுதியில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை கடத்தி வருகின்றனர். இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வனப்பகுதிக்குள் தேன் எடுக்கச்சென்றபோது, அங்கு கேரள எல்லைக்குட்பட்ட பகுதியில் வனவராக பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் பெண்களின் சேலையை இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன பெண்கள் அலறவே, அங்கு வந்த கிராமத்தினர் வனத்துறையினரை விரட்டியடித்தனர். மேலும், வனத்துறை உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தபோது அவர் மெத்தன பதிலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதி மலைவாழ்மக்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.