திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நெல்லையில் பயங்கரம்.. ஒரு தலை காதல் விவகாரம்.. பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை..!
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்தவர் சந்தியா. இவர் அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று சந்தியா பணிபுரிந்த பேன்சி கடையின் பொருள்கள் அருகில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் அதை எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சந்தியா திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உடன்பணியாளர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சந்தியா ரத்த வெள்ளத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி சந்தியாவை வற்புறுத்தியதாகவும் அதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சந்தியாவை வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.