மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரம்.. கணவர் கண் எதிரே உடல் நசுங்கி மனைவி பலியான சம்பவம்.. திருச்சியில் சோகம்..!
திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் பிரபு - பிரியங்கா தம்பதியினர். இவர்கள் இருவரும் வங்கி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று பிரபு தனது மனைவி பிரியங்காவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் மன்னர்புரம் பிஎன்டி காலனி அருகே வந்தபோது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென அவர்கள் மேல் பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் சென்ற இருசக்கர வாகனமானது தூக்கி வீசப்பட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரியங்காவின் மீது லாரியின் சக்கரமானது ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரியங்காவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரியங்காவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.