மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்குக்கா அக்கப்போரு... மது பாட்டிலுக்காக ஆம்னி பேருந்து நடத்துனர் கொலை... திருநங்கை உட்பட 3 பேர் கைது.!
சென்னை கோயம்பேட்டில் மது பாட்டிலுக்காக ஆம்னி பேருந்து நடத்துனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு காவல் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த நபரின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையின் விசாரணையில் இறந்த நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும் அவர் ஆம்னி பஸ்ஸில் நடத்துனூராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அவரது முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் இது கொலையாக இருக்கலாம் என கருதிய காவல்துறையினர் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது கொலை நடந்த நேரத்தில் இரண்டு திருநங்கைகள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்க அடையாளங்களை வைத்து காவல்துறை விசாரணை செய்து கோயம்பேட்டில் பதுங்கி இருந்த திருநங்கைகளான ப்ரீத்தி(34) மற்றும் ஆர்த்தி(35) ஆகியோரை பிடித்து விசாரித்தனர் . இந்த விசாரணையில் பொளத்திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் வெளியாகின. ப்ரீத்தி மற்றும் ஆர்த்தி ஆகியோர் ரவிச்சந்திரனை சந்தித்தபோது அவரிடம் மது பாட்டில்கள் மட்டுமே இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காசி எடுத்து வருவதாக கூறி சென்ற அவர் காசி எடுக்காமல் திரும்பி வந்து இருக்கிறார். அப்போது மது பாட்டிலை தருமாறு திருநங்கைகள் கேட்டதற்கும் மறுப்பு தெரிவித்து தகராறு ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது நண்பரான சம்பத்குமார் என்பவரை அழைத்து மது பாட்டிலை வாங்கித் தருமாறு கேட்டு இருக்கின்றனர் திருநங்கைகள். அப்போது சம்பத்குமார் மற்றும் ரவிச்சந்திரன் இடையே ஏற்பட்ட முதலில் ஆத்திரமடைந்த சம்பத்குமார் தலை எடுத்து அவரது முகத்தில் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்து மது பாட்டில் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பத்குமார்,ப்ரீத்தி மற்றும் ஆர்த்தி ஆகியோரை காவல்துறை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தது.